மான் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
மான் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனவர் கருணாகரன் மற்றும் வனப் பணியாளர்கள் சுண்டப்பட்டி பிரிவு எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் புள்ளி மானை வேட்டையாடியது தெரியவந்தது.
மேலும் மான் இறைச்சியை வாங்க வந்த 2 பேர் என மொத்தம் 6 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் விவரம் வருமாறு:- மணிகண்டன் (வயது 38) கார்த்திக் (26), முருகேசன் (39), மற்றொரு கார்த்திக் (27), பாலன் (75), குமார் (42) ஆகியோர் ஆவர்.இதுகுறித்து ஜோசப் ஸ்டாலின் அறிக்கை தயார் செய்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜூக்கு அனுப்பி வைத்தார். அவரது உத்தரவின் பேரில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது.