வாலிபர்கள் உள்பட 6 பேர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது


வாலிபர்கள் உள்பட 6 பேர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
x

கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் உள்பட 6 பேர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் கள்ளக்குறிச்சி தாலுகா பங்காரம் கிராமம் ஜோதிவேல் மகன் ஜெயவேல்(வயது 22), சின்னசேலம் குமார் மகன் விஜய்(26), கள்ளக்குறிச்சி தாலுகா கா.மாமனந்தல் கிராமம் ஜாபர்அலி மகன் இப்ராகிம்(26) ஆகிய 3 பேர் கடலூர் சிறையிலும், சங்கராபுரம் தாலுகா எஸ்.வி.பாளையம் ராமலிங்கம்(56) திருச்சி மத்திய சிறையிலும் உள்ளார்.

அதேபோல் சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கல்வராயன்மலை தாலுகா சோத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் குமார்(25), கள்ளக்குறிச்சி தாலுகா காட்டனந்தல் கிராமம் வெங்கடேசன்(45) ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். இவர்களின் குற்ற செயலை தடுக்கும் வகையில் 6 பேரையும் தடுப்பு காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் சின்னசேலம் போலீசார் மேற்படி 6 பேரையும் ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் ராமலிங்கம் உள்பட 6 பேரிடமும் போலீசார் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story