விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்
விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனிதவள்ளி மற்றும் போலீசார், சிந்தாமணி மாந்தோப்பு அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சிந்தாமணி மேற்கு தெருவை சேர்ந்த மதன் (வயது 23), கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண் (27), வடிவேல் (29), சிந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்த விக்னேஷ் (26), ராமச்சந்திரன் (30), சங்கர் (47) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்கள் 6 பேரிடமிருந்தும் ரூ.3,670 ரொக்கம் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story