பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
விராலிமலை ஒன்றியம், மண்டையூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவூர், வங்காரம்பட்டி கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது வங்காரம்பட்டியில் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்த வங்காரம்பட்டியை சேர்ந்த லெட்சுமணன் மகன் வக்கீல் ரமேஷ் (வயது 33), பிடாம்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் ரமேஷ் (30), பழனிச்சாமி மகன் ரகுபதி (26), முள்ளிப்பட்டி இறைவன் நகரை சேர்ந்த ஷாஜகான் மகன் ஷாபி (31), திருச்சி அய்யம்பட்டியை சேர்ந்த செல்வம் (50), ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த முருகன் (52) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கே.புதுப்பட்டி அருகே மேல்நிலைப்பட்டி கலை கோவில் கண்மாய் பகுதியில் கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேரை பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.