மது விற்ற 6 பேர் கைது
மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த வேல்முருகன்(வயது 29), ராமநாதபுரத்தை சேர்ந்த பிரேம்குமார்(25) மண்மங்கலத்தை சேர்ந்த புகழேந்தி(40), கடவூரை சேர்ந்த மாரிமுத்து(46) மற்றும் மற்றொரு மாரிமுத்து(41), முத்துப்பாண்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story