மது விற்ற 6 பேர் கைது
மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்புக் கோவில் முக்கம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் தேன்கனியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுவிற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (55), பெருமாள் (46), விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்த சண்முகம் (61), தெற்கு தெருவை சேர்ந்த இளையராஜா (31), கல்குடியை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.