புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பெட்டி மற்றும் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ராஜகுரு(வயது 72), சுந்தர்(47), முருகன்(39) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் இவா்களிடம் இருந்து 55 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் எஸ்.ஒகையூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஜெகநாதன்(51) என்பவரை கைது செய்த போலீசார் இவரிடம் இருந்து 7 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பெரியசிறுவத்தூர் கிராமம், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜமாணிக்கம்(47), தென்பொன்பரப்பி கிராமம், மாரியம்மன் கோவில்தெருவில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஜெயக்குமார்(46) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story