மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் வந்து போலீசாரை மிரட்டிய 6 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் வந்து போலீசாரை மிரட்டிய 6 பேர் கைது
பார்த்திபனூர்
பரமக்குடி தாலுகா பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேசன். இவர் போலீசாருடன் பார்த்திபனூர் - நரிக்குடி சந்திப்பில் வாகனச் சோதனை செய்து கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் தலா 4 பேர் வீதம் 8 பேர் கையில் வாள் மற்றும் வீச்சு அரிவாளுடன் சத்தம் போட்டபடி வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் போலீசாருடன் தகராறு செய்து அருகில் வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மானாமதுரையை சேர்ந்த சிவபாலன்(22), மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டனர். மற்றவர்களான பார்த்திபனூரை சேர்ந்த பாண்டி(21), காளையார்கோவில் மறவமங்கலம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன்(22), மானாமதுரை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விஷ்ணு(21) உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வாள் மற்றும் வீச்சு அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.