கார் கவிழ்ந்து பெண் பலி; 6 பேர் காயம்


கார் கவிழ்ந்து பெண் பலி; 6 பேர் காயம்
x

கந்திகுப்பம் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி; 6 பேர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்தவர்கள் ஓன்னம்மாள் (வயது 60), லட்சுமி (55) ஜெயம்மாள் (55) நேத்ராவதி, கரிய கவுடா (55 சிக்கெ கவுடா(40). இவர்கள் திருவண்ணாமலைக்கு காரில் சென்றனர். காரை அணில்குமார்(31) என்பவர் ஓட்டி சென்றார். கந்திகுப்பம் அருகே உள்ள ஓரப்பம் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒன்னம்மாள் உயிரிழந்தார். டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story