மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x

மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறித்து விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வல்லம் ஊராட்சியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 35). இவருடைய மனைவி லதா (27). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கணவர் ஜெகநாதன் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் லதா இருந்தபோது, அப்போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த ஒருவன் கடையில் பொருட்கள் வாங்குவது போல் லதா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலி சரடு, 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவனுடன் தப்பி சென்றான்.

அப்போது லதா கத்தி கூச்சலிட்டுள்ளார் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். ஆனால் மோட்டார் சைக்கிள் தப்பி சென்ற 2 பேரும் மின்னல் வேகத்தில் ஒரகடம் பகுதி நோக்கி சென்று விட்டனர். இது குறித்து லதா ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் சாலை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் யார்? என வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story