தீ விபத்தில் 6 கடைகள் எரிந்து நாசம்


தீ விபத்தில் 6 கடைகள் எரிந்து நாசம்
x

மணமேல்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கடைகள் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

தீ விபத்து

மணமேல்குடி சந்தைப்பேட்டையில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சிறு கடைகள் உள்ளன. இந்த கடைகளை மீன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் வாடகைக்கு எடுத்து மீன் மற்றும் கருவாடு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கடையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மளமளவென பக்கத்துக்கு கடைகளுக்கும் தீ பரவியது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

6 கடைகள் எரிந்து நாசம்

இந்த விபத்தால் 6 கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவாடு மற்றும் மீன்கள் மற்றும் தளவாட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story