கோவை வழியாக 6 சிறப்பு ரெயில்கள்
கோவை வழியாக 6 சிறப்பு ரெயில்கள்
கோவை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
நெரிசலை தவிர்க்க
இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில்,
திருவனந்தபுரம்-ஐதராபாத் இடையிலான சிறப்பு ரெயில் (எண்:07120), வரும்10-ந் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு,
12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இந்த ரெயில், கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில்நிலையங்களில்நின்று செல்லும்.கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் - கேரள மாநிலம் கொல்லம் இடையிலான சிறப்புரெயில் (06501), யஷ்வந்த்பூரில் இருந்து இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1
மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம் ரெயில்
கொல்லம் - யஷ்வந்த்பூர் இடையிலான சிறப்பு ரெயில் (எண்:06502),
கொல்லத்தில் இருந்து நாளை (வியா ழக்கிழமை காலை 6.10 மணிக்கு புறப்பட்டு,மறுநாள் இரவு 10 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். இந்த ரெயில்கள்,கோவை, திருப்பூர். ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ரெயில்நிலையங்களில்நின்று செல்லும்.சென்னை சென்ட்ரல் எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரெயில் (எண்:06053),சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (7-ந் தேதி) இரவு 11.30 மணிக்கு
புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (06054),எர்ணாகுளத்தில் இருந்து வரும் 9-ந் தேதி பிற்பகல் 2.20 மணிக்குபுறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்சென்றடையும். இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி,அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நெல்லை-பெங்களூரு
நெல்லை -பெங்களூரு கன்டோன்மென்ட் இடையிலான சிறப்பு ரெயில் (எண்:06052),நெல்லையில் இருந்து வரும் 10-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடையும்.இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருபேட்,கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.