2 பேருக்கு தலா 6 ஆண்டு ஜெயில்


2 பேருக்கு தலா 6 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 1 Jun 2022 1:00 AM IST (Updated: 1 Jun 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

நகை திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராசிபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

2 பேர் கைது

ராசிபுரம் டவுன் மாரப்பன் தோட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 31). இவரது வீட்டில் கடந்த 24-10-2020- அன்று தங்க காசுகள், மோதிரம் என 4 பவுன் நகைகள் திருட்டு போனது.

இதுபற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்டம் ஆனையூர் தாலுகா இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜன் என்ற சிவராஜன் (44), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா தெம்மம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் எனற ஸ்டீபன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

6 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மணிகண்டன், சதீஷ் ஆகிய இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனை வழங்கப்பட்ட பிறகு இருவரையும் ராசிபுரம் போலீசார் புதுக்கோட்டை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

1 More update

Next Story