60 கி.மீ. சைக்கிளில் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவி


60 கி.மீ. சைக்கிளில் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவி
x

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற 60 கி.மீ. சைக்கிளில் சென்று கலெக்டரிடம் மாணவி மனு கொடுத்தாா்.

விழுப்புரம்

செஞ்சி:

மேல்மலையனூர் அருகே அன்னபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வர் மகள் செம்மொழி(வயது 12). இவர், கலத்தம்பட்டு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அன்னப்பள்ளம் கிராமத்தில் உள்ள 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் 5 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. இதனை அகற்றக்கோரி கிராம மக்கள் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக செம்மொழி இன்று காலை அன்னபள்ளத்தில் இருந்து சைக்கிளில் விழுப்புரத்துக்கு புறப்பட்டார். 60 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி வந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனுவைபெற்ற அதிகாரி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

1 More update

Next Story