இறந்த கால்நடைகளுக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு


இறந்த கால்நடைகளுக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு
x
தினத்தந்தி 24 Sept 2023 2:30 AM IST (Updated: 24 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

சிறுத்தைப்புலி தாக்கி இறந்த கால்நடைகளுக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல்வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த 2 மாடுகள் மற்றும் ஒரு ஆட்டை சிறுத்தைப்புலி தாக்கி கொன்றது. இந்த நிலையில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வனபாதுகாவலர் கருப்புசாமி ஆகியோர் உத்தரவின்படி உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களான சைனூதீன், கருப்பண்ணன், பிரபாகரன் ஆகியோருக்கு இழப்பீடு தொகையாக மொத்தம் ரூ.60 ஆயிரத்தை தேவாலா வனச்சரகர் சஞ்சீவி வழங்கினார். இதில் வனவர்கள் பாலகிருஷ்ணன், சுபைத், வனகாப்பாளர்கள் பரமேஸ், தம்பகுமார் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்புகாவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story