60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்


60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உமரிக்காட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள உமரிக்காட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார், துணைத்தலைவர் பாஸ்கர், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், ஏரல் பேரூர் கழகச் செயலாளர் ராயப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜான், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன், ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர்கள் கோதண்டராமன் (மேற்கு), பாலசிங் (கிழக்கு), மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், உமரிக்காடு மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story