இலங்கைக்கு கடத்திய 600 கிலோ பீடிஇலை பறிமுதல்


இலங்கைக்கு கடத்திய 600 கிலோ பீடிஇலை பறிமுதல்
x

ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய 600 கிலோ பீடிஇலை பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 19 பார்சல்கள் கடலில் மிதந்து வந்துள்ளன. அந்த பார்சல்களை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் பிரித்து சோதனை செய்தனர். அப்போது அந்த பார்சல்களில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பார்சல்களை எடை போட்டு பார்த்ததில் 606 கிலோ பீடிஇலை இருந்துள்ளது. கைப்பற்றப்பட்ட பீடிஇலை பார்சல் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல்காரர்கள் மூலம் படகில் கடத்திக் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இலங்கைக்கு இந்த பீடிஇலை படகு மூலம் கடத்திக் கொண்டு சென்ற கடத்தல்காரர்கள் யார்?என்பது குறித்தும் ராமேசுவரத்தில் உள்ள கியூ மற்றும் உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story