பிளஸ்-2 இயற்பியல் தேர்வை 6,188 பேர் எழுதினர்


பிளஸ்-2 இயற்பியல் தேர்வை 6,188 பேர் எழுதினர்
x

பிளஸ்-2 இயற்பியல் தேர்வை 6,188 பேர் எழுதினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்பியல் பாட தேர்வினை எழுத தகுதிபெற்றிருந்த 6,285 மாணவ-மாணவிகளில், 6,188 பேர் தேர்வு எழுதினர். 38 மாணவர்களும், 59 மாணவிகளும் என 97 பேர் தேர்வு எழுதவில்லை. இதேபோல் மாவட்டத்தில் பொருளாதாரம் பாட தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்த 1,215 மாணவ-மாணவிகளில், 1,145 பேர் தேர்வு எழுதினர். 34 மாணவர்களும், 36 மாணவிகளும் என 70 பேர் தேர்வு எழுதவில்லை. கணினி தொழில்நுட்பம் பாட தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்த 204 மாணவ-மாணவிகளில், 186 பேர் தேர்வு எழுதினர். 14 மாணவர்களும், 4 மாணவிகளும் என 18 பேர் தேர்வு எழுதவில்லை.


Next Story