சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா


சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா
x

இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி ஆகியவை இணைந்து 61-வது தேசிய மருந்தியல் வார விழாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடத்தியது.

சென்னை

விழாவுக்கு தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனர் பி.வி.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மத்திய மருந்துகள் கட்டுபாட்டு துணை இயக்குனர் டாக்டர் பி.குமார் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி மருந்தியல் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் ஆஸ்பத்திரியின் ரத்த வங்கியில் மருந்தியல் மாணவர்கள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். இதையடுத்து 'உலகத்தின் மருந்தகம் இந்தியா' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

மருந்தாளுனர்கள் மூலமாக பொதுமக்களுக்கு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. தமிழகத்தின் சிறந்த மருந்தாளுனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.


Next Story