கெட்டுப்போன 62 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
உளுந்தூர்பேட்டை உணவகங்களில் கெட்டுப்போன 62 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாாி சுகுந்தன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கடைகளில் விதிமுறைகளை மீறி கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த மொத்தம் 62 கிலோ கோழி இறைச்சி, 6 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 15 லிட்டர் மயோனைஸ், 25 கிலோ சாதம், 15 கிலோ நூடுல்ஸ்,160 பரோட்டா ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த உணவு பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து அதிகாரிகள், அங்கிருந்த உணவக உரிமையாளர்களிடம், இனி இதுபோன்று விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கினர்.
Related Tags :
Next Story