எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழா-மதுரை ஆதீனம் பங்கேற்பு


எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழா-மதுரை ஆதீனம் பங்கேற்பு
x

எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழா நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் பங்கேற்றார்.

சேலம்

எடப்பாடி:

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சிவனடியார் குழுவினரால் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் 63 நாயன்மார்கள் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 16-ம் ஆண்டு பெருவிழா நிகழ்வாக 63 நாயன்மார்கள் சிலைகள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிகர், ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் தொடங்கிய ஊர்வலத்தில் சிவனடியார்கள் 63 நாயன்மார்களின் சிலைகளை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தை திருக்கழுக்குன்றம் தாமோதரன் தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சிவனடியார் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story