குரூப்-1 தேர்வினை 6,683 பேர் எழுதவுள்ளனர்


குரூப்-1 தேர்வினை 6,683 பேர் எழுதவுள்ளனர்
x

குரூப்-1 தேர்வினை 6,683 பேர் இன்று எழுதவுள்ளனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-1 (குரூப்-1) தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை நடக்கிறது. இந்த தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் 3,406 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் 3,277 பேரும் எழுத உள்ளனர். மேலும், தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு கண்காணிப்பிற்காக மாவட்டங்களில் துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அலுவலர்கள், இயங்கு குழுக்கள் மற்றும் உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு பாதுகாப்பு பணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் அனைத்து மையங்களிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

1 More update

Next Story