680 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை


680 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி வார சந்தையில் 680 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வார சந்தையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 110 விவசாயிகள் 680 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவின்டால் அதிகபட்சம் ரூ.7 ஆயிரத்து 169-க்கும், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 399-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.5 ஆயிரத்து 269-க்கும், குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 809-க்கும் ஏலம் போனது. இதில் 680 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையானது. திருப்பூர், விழுப்புரம், புஞ்சை புளியம்பட்டி, அன்னூர் ஆகிய பகுதிகளை சார்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தி மூட்டைகளை வாங்கி சென்றனர். இத்தகவலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.


Next Story