தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,328 வழக்குகளுக்கு ரூ.7 கோடி தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,328 வழக்குகளுக்கு ரூ.7 கோடி தீர்வு
x

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,328 வழக்குகளுக்கு ரூ.7 கோடி தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

தேசிய-மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழிக்காட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. அரியலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி தலைமை தாங்கினார். 2-ம் அமர்வுக்கு நீதிபதி கர்ணன் தலைமை தாங்கினார். 3-ம் அமர்வுக்கு குடும்ப நல நீதிபதி செல்வம் தலைமை தாங்கினார். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 962 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில், 6 குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 35 சிவில் வழக்குகளுக்கு ரூ.5 கோடியே 15 லட்சத்து 99 ஆயிரத்து 363-க்கும், 21 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.73 லட்சத்து 35 ஆயிரத்து 100-க்கும், 598 சிறு குற்ற வழக்குகளுக்கு ரூ.11 லட்சத்து 9 ஆயிரத்து 90-க்கும், 1 காசோலை வழக்கில் ரூ.6 லட்சத்துக்கும், 82 வங்கி வழக்குகளுக்கு ரூ.94 லட்சத்து 24 ஆயிரத்து 500-க்கும், 4,579 போக்குவரத்து விதிமுறைகள் மீறல் வழக்குகளுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 500-க்கு என மொத்தம் 5 ஆயிரத்து 328 வழக்குகளுக்கு ரூ.7 கோடியே 12 லட்சத்து 91 ஆயிரத்து 553-க்கு தீர்வு காணப்பட்டது. குடும்ப நல வழக்குகளில் 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் செய்திருந்தார்.


Next Story