7 லட்சத்து 49 ஆயிரத்து 886 வாக்காளர்கள்


7 லட்சத்து 49 ஆயிரத்து 886 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதியில் 7 லட்சத்து 49 ஆயிரத்து 886 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதியில் 7 லட்சத்து 49 ஆயிரத்து 886 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நேற்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சப்-கலெக்டர் பிரியங்கா வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார்கள் வைரமுத்து, ஜோதிபாசு, துணை தாசில்தார் சரவணன் மற்றும் தேர்தல் பிரிவு தாசில்தார்கள், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

பெண்கள் அதிகம்

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி பொள்ளாச்சி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 805 பேரும், பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 471 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 40 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 316 பேர் உள்ளனர்.

வால்பாறை தொகுதியில் ஆண்கள் 94 ஆயிரத்து 167 பேரும், பெண்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 196 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 21 பேரும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 384 பேர் உள்ளனர். கிணத்துக்கடவு தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 146 பேரும், பெண்கள் 1 லட்சத்து 68 ஆயிரம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 40 பேரும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 186 பேர் உள்ளனர். மேற்கண்ட 3 தொகுதிகளிலும் பெண்களே அதிகம்.

சேர்த்தல், நீக்கல் விவரம்

பொள்ளாச்சி தொகுதியில் ஆண்கள் 1,620 பேரும், பெண்கள் 1,962 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 3,584 பேரும், வால்பாறை தொகுதியில் ஆண்கள் 1,756 பேரும், பெண்கள் 2,143 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் சேர்த்து மொத்தம் 3,904 பேரும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் பொள்ளாச்சி தொகுதியில் ஆண்கள் 993 பேரும், பெண்கள் 1,042 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் சேர்த்து மொத்தம் 2,039 வாக்காளர்களும், வால்பாறை தொகுதியில் ஆண்கள் 1,914 பேரும், பெண்கள் 2,138 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் சேர்த்து மொத்தம் 4,057 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story