திருட்டு வழக்குகளில் 7 பேர் கைது 19 மோட்டார் சைக்கிள்கள்- நகை பறிமுதல்


திருட்டு வழக்குகளில் 7 பேர் கைது 19 மோட்டார் சைக்கிள்கள்- நகை பறிமுதல்
x
தினத்தந்தி 9 Sept 2023 2:30 AM IST (Updated: 9 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை


மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருட்டு சம்பவங்கள்

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வாகன திருட்டுகளில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து, 19 உயர் ரக மோட்டர் சைக்கிள்கள் மற்றும் 4 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கொட்டாம்பட்டி போலீஸ் நிலைய சரகத்தில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிராவயலைச் சேர்ந்த அழகுமணிகண்டன் மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் கம்பூரைச் சேர்ந்த அரசு ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 5 உயர் ரக இரு சக்கர வாகனங்கள் உள்பட 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

19 மோட்டர் சைக்கிள்கள்

இதேபோல் ஒத்தக்கடை போலீஸ் நிலைய சரகத்தில் 2 வெவ்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருமங்கலம் மற்றும் பேரையூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 12 திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து 19 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகளை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


Next Story