ஆட்டோ-பஸ் மோதல்; தம்பதி உள்பட 7 பேர் படுகாயம்


ஆட்டோ-பஸ் மோதல்; தம்பதி உள்பட 7 பேர் படுகாயம்
x

பழனி அருகே ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வேங்கைகுறிச்சியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர், நேற்று தனது குடும்பத்துடன் ஆட்டோவில் பழனி அருகே கணக்கன்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அங்கு அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆயக்குடியை அடுத்த மூகாம்பிகை கோவில் பகுதியில் அவர்கள் சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுதாகர், அவரது மனைவி மார்க்கிரேட் ஸ்டெல்லா (38), மகள்கள் தேசியா (20), ஓவியா (19), பிரசிதா (14) மற்றும் உறவினர் ஐஸ்வர்யா (16), ஆட்டோ டிரைவர் கிருஷ்ணன் (35) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.Next Story