கல்லூரி மாணவர் உள்பட 7 பேர் கைது


கல்லூரி மாணவர் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர் உள்பட 7 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை

கோவை மாநகரில் சில இடங்களில் கஞ்சா, போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனூர் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுங்கம் பைபாஸ் ரோட்டில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் அவர் உக்க டம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அப்சல் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.6,400-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல், உக்கடம் பைபாஸ் ரவுண்டானா கீரை தோட்டம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

7 பேர் கைது

இதுபோல் சுந்தராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 2 கிராம் மெத்தபிட்டமின் என்ற போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், மதுக்கரை மார்க்கெட் ரெயில்வே பாலம் அருகே போதை மாத்திரை விற்ற குனியமுத்தூர் மகாராஜா காலனியை சேர்ந்த பிரோஷ்கான் (24), கேரளா மலப்புரத்தை சேர்ந்த முகமத் லபீப் (23), குனியமுத்தூர் பி.கே. புதூரை சேர்ந்த ஹாரீஸ்பாபு (22), வடவள்ளி பொம்மணம்பாளையத்தை சேர்ந்த முருகவேல் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிராம் போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் உள்பட 7 பேரை போலீசார் கைதுசெய்தனர்.



Next Story