மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x

மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் வாளாந்தூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 55), பொய்யாமணி பகுதியை சேர்ந்த மணி (52), ராஜேந்திரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (62), மருதூரை சேர்ந்த தங்கராசு (82), குளித்தலை சுங்ககேட் பகுதியை சேர்ந்த ராமு (35), பெரியபாலம் பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (47) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புன்னம் சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள மசக்கவுண்டன்புதூர் பிரிவு அருகே மதுவிற்ற மணி (59) என்பவரை வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story