வெறிநாய்கள் கடித்து 7 பேர் காயம்


வெறிநாய்கள் கடித்து 7 பேர் காயம்
x

திண்டுக்கல் அருகே வெறிநாய்கள் கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்குள் நேற்று வெறிநாய்கள் புகுந்தன. அப்போது சாலைகளில் நடமாடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அந்த நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. இதில், வேடபட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 45), ரெண்டலப்பாறையை சேர்ந்த சந்திரன் (52), பெருமாள் (70), கனகராஜ் (67), ரெட்டியபட்டியை சேர்ந்த திருமூர்த்தி (43) உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story