திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக 7 பேர் பதவி உயர்வு


திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக 7 பேர் பதவி உயர்வு
x

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக 7 பேர் பதவி உயர்வு பெற்றனர்.

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் 149 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்பாபு, கீரனூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாரதி, சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டனர்.

அதேபோல் தனிப்பிரிவின் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, திண்டுக்கல் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா ஆகியோர் பதவி உயர்வு பெற்று தெற்கு மண்டலத்துக்கும், சிறப்பு புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் ரெம்சியா ஆரோக்கியராஜ் பதவி உயர்வு பெற்று சிறப்பு புலனாய்வு பிரிவுக்கும், திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.

இந்த 7 பேரும் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 5 வாரங்களாக பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் ஒருவாரம் பயிற்சியை முடித்து கொண்டு இன்ஸ்பெக்டராக பதவி ஏற்க உள்ளனர்.



Related Tags :
Next Story