நில அளவையர் தேர்வில் ஒரே மையத்திலிருந்து மட்டும் 700 பேர் தேர்வு..! விசாரணை நடத்த கோரிக்கை


நில அளவையர் தேர்வில் ஒரே மையத்திலிருந்து மட்டும் 700 பேர் தேர்வு..! விசாரணை நடத்த கோரிக்கை
x

முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை,

கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நில அளவையர் மற்றும் வரைவாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

இந்த பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தேர்வுமையத்தில் இருந்து மட்டும் 700 பேர் தேர்வாகி உள்ளனர். ஒரே மையத்தில் இருந்து 700 பேர் தேர்வாகியுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மையத்தில் இருந்து மட்டும் அதிக அளவில் தேர்வாகியுள்ளதால், முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story