சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 700 போலீசார்


சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 700 போலீசார்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திரதின விழா பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை

சுதந்திர தின விழா

இந்தியாவின் 76-வது சுதந்திர தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.

இதற்காக நேற்று போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி கலந்துகொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

700 போலீசார் பாதுகாப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அம்மூர் ெரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் என முக்கிய இடங்கள், நகரின் பல பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story