குட்கா விற்ற 71 பேருக்கு ரூ.3½ லட்சம் அபராதம்

குட்கா விற்ற 71 பேருக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
x

மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 71 பேருக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளன என்றும், 140 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் கூறினார்.

சேலம்

மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 71 பேருக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளன என்றும், 140 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் கூறினார்.

குட்கா பொருட்கள்

குட்கா பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் சேலத்திற்கு அவ்வப்போது கடத்தி வரப்படுகிறது. இதை தடுக்க மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குட்கா பொருட்கள் கடத்தி வருபவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே போன்று மாவட்டத்தில் சில கடைகளில் குட்கா பதுக்கி விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடைகளுக்கு சீல்

இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவனிடம் கேட்ட போது, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 4 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளில் பதுக்கி விற்பனை செய்த 71 பேர்களுக்கு ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து, 140 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

Next Story