7.5 சதவீத உள் ஒதுக்கீடு: புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது


7.5 சதவீத உள் ஒதுக்கீடு: புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது
x

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

புதுக்கோட்டை

கலந்தாய்வு

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 49 பேர் கலந்து கொள்ள அழைப்பு வந்திருந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர். 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு இடம் கிடைத்தது. இதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 19 பேருக்கும், பல் மருத்துவ படிப்பில் 2 பேருக்கும் என மொத்தம் 21 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்தது.

அரசு பள்ளி மாணவர்கள்

பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன், வெண்ணவால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நந்தகுமரன், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா, ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலகிருஷ்ணன், மனோஜ், சுப்ரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ராஜேஸ்வரி, நிவேதா, சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரகாஷ், அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரத்தினவேல், தாஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மகேஸ்வரன், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சீனிவாசன், சுப்ரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிராஜ், ஜெகதீஸ்வரன், ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யுவதிகா, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அறிவுநிதி, சந்தைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்லமுத்து, கீரமங்கலத்தை சேர்ந்த மாணவிகள் சுருதி, ஜனனி, சுபதாரணி, ஆலங்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஜா உள்பட மொத்தம் 21 பேர் ஆவர். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 26 போ் சேர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story