75வது சுதந்திர தின கொண்டாட்டம்: தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றம்


75வது சுதந்திர தின கொண்டாட்டம்: தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றம்
x

நாட்டில் 75வது சுதந்திர தின கொண்டாடப்பட உள்ளதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் அமுதப் பெருவிழாவாக கொண்டப்பட இருக்கிறது. இந்தாண்டு சுதந்திரதின விழாவை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இந்திய மக்கள் அனைவரும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து வீடு, கடைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் காவல் நிலையங்கள் என அனைத்திலும் இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரியிருந்தார்.

இந்நிலையில் நாட்டில் 75வது சுதந்திர தின கொண்டாட்டப்படுவதையொட்டி, தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் வீடுகளில் தேசியக்கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர்.

முன்னதாக பொதுமக்களுக்கு மூவர்ண கொடி தடையில்லாமல் வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 200 மில்லியன் மூவர்ணக் கொடிகளை ஏற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்ற சொல்லி மாணவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.


Next Story