பிளஸ்-2 உயிரியல் தேர்வினை 7,646 பேர் எழுதினர்


பிளஸ்-2 உயிரியல் தேர்வினை 7,646 பேர் எழுதினர்
x

பிளஸ்-2 உயிரியல் தேர்வினை 7,646 பேர் எழுதினர். 229 பேர் தேர்வு எழுத வரவில்லை.

விருதுநகர்


பிளஸ்-2 உயிரியல் தேர்வினை 7,646 பேர் எழுதினர். 229 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-2 தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 5,902 மாணவர்களும், 8,432 மாணவிகளும் ஆக மொத்தம் 14,334 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 5,528 மாணவர்களும், 8,114 மாணவிகளும் ஆக மொத்தம் 13,642 பேர் தேர்வு எழுதினார். 374 மாணவர்களும், 318 மாணவிகளும் ஆக மொத்தம் 692 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பாட வாரியாக தேர்வு எழுதியவர்கள் விவரம் வருமாறு உயிரியல் பாடத்தேர்வினை 3,232 மாணவர்களும், 4,643 மாணவிகளும் ஆக மொத்தம் 7,875 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 3,110 மாணவர்களும், 4,536 மாணவிகளும் ஆக மொத்தம் 7,646 பேர் தேர்வு எழுதினர். 122 மாணவர்களும், 107 மாணவிகளும் ஆக மொத்தம் 229 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வரலாறு

தாவரவியல் பாடப்பிரிவில் 655 மாணவர்களும், 1,626 மாணவிகளும் ஆக மொத்தம் 2,281 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 580 மாணவர்களும், 1,554 மாணவிகளும் ஆக மொத்தம் 2,134 பேர் தேர்வு எழுதினர். 75 மாணவர்களும் 72 மாணவிகளும் ஆக மொத்தம் 147 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வரலாறு பாடப்பிரிவில் 1,718 மாணவர்களும், 1,619 மாணவிகளும் ஆக மொத்தம் 3,337 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1,545 மாணவர்களும், 1,487 மாணவிகளும் ஆக மொத்தம் 3,032 பேர் தேர்வு எழுதினர். 173 மாணவர்களும், 132 மாணவிகளும் ஆக மொத்தம் 305 பேர் தேர்வு எழுதவரவில்லை.

அலுவலக மேலாண்மை

வணிக கணக்கு மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவு தேர்வில் 169 மாணவர்களும், 344 மாணவிகளும் ஆக மொத்தம் 513 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 169 மாணவர்களும், 340 மாணவிகளும் ஆக மொத்தம் 509 பேர் தேர்வு எழுதினர். 4 மாணவிகள் மட்டும் தேர்வு எழுத வரவில்லை. வணிக மேலாண்மை மற்றும் பொருளியல் தேர்வில் 52 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 50 மாணவர்கள் தேர்வு எழுதினர். 2 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுத வரவில்லை.

அலுவலக மேலாண்மை பாடப்பிரிவில் 76 மாணவர்களும், 200 மாணவிகளும் ஆக மொத்தம் 276 பேர் எழுத வேண்டிய நிலையில் 74 மாணவர்களும், 197 மாணவிகளும் ஆக மொத்தம் 271 பேர் தேர்வு எழுதினர். 2 மாணவர்களும் 3 மாணவிகளும் ஆக மொத்தம் 5 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story