7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

ராயப்பேட்டையில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 50). வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் தீப்திகா (11). இவர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தீப்திகா அருகில் உள்ள தோழி ஒருவர் வீட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். இரவு 7 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

தற்கொலை

பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தீப்திகா, திடீரென வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளையாட சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தீப்திகாவின் அண்ணன் ரித்தீஸ் (14), தங்கை தீப்திகாவை தேடினார். பின்னர் பூட்டி இருந்த அறை கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீப்திகா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், தற்கொலை செய்த மாணவி தீப்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story