8 குடிசைகள் தீக்கிரையானது


8 குடிசைகள் தீக்கிரையானது
x

ஜேடர்பாளையம் அருகே 8 குடிசைகள் தீக்கிரையானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

8 குடிசைகள் சேதம்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதற்காக குடிசை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை வட மாநில தொழிலாளர்களின் குடிசை வீடுகள் மற்றும் ஆலை கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் அங்கிருந்த 8 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது வெல்ல ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கு போலீசார் குடிசைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் பாதுகாப்பு

இதேபோல் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (50). இவர் அதே பகுதியில் வெல்ல ஆலை கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலை கொட்டகை மற்றும் வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story