தொடர் மழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து


தொடர் மழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து
x
தினத்தந்தி 13 Nov 2022 2:58 AM GMT (Updated: 13 Nov 2022 3:00 AM GMT)

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, சென்னை புறநகர் பகுதிகளான கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறி செல்கின்றனர்.

இந்த நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.


Next Story