வெறிநாய் கடித்து 18 ஆடுகள் செத்தன

சேந்தமங்கலம் அருகே வெறிநாய் கடித்து 18 ஆடுகள் செத்தன.
நாமக்கல்
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியாம்பாளையம் ஊராட்சி சிதம்பரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). விவசாயி. இவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் இரும்பு கிரில் அமைத்து 25 ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கண்ணன் ஆட்டுபட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு 14 ஆடுகள், 4 ஆட்டுக்குட்டிகள் செத்து கிடந்தன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை டாக்டர் செத்து கிடந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். அப்போது ஆடுகளை, வெறிநாய் கடித்துக்கொன்றது என்பதை உறுதிப்படுத்தினார். சேந்தமங்கலம் அருகே வெறிநாய் கடித்து 18 ஆடுகள் செத்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






