கோட்டப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் 8 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


கோட்டப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் 8 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

கோட்டப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை முறைப்படி நடத்தாவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்ய போவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் 8 பேர் மனு கொடுத்தனர்.

தர்மபுரி

தர்மபுரி:

கோட்டப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை முறைப்படி நடத்தாவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்ய போவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் 8 பேர் மனு கொடுத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி கிராம ஊராட்சியை சேர்ந்த 8 வார்டு உறுப்பினர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோட்டப்பட்டி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் சமூக மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை. நாங்கள் பதவி ஏற்ற நாள் முதல் இதுவரை ஊராட்சி நிதி நிலை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு

ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலை தொடர்பாக நாங்கள் தெரிவித்துவரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்து நிர்வாகம் முறைப்படி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்காவிட்டால் 8 உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோட்டப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 8 பேர் கூண்டோடு ராஜினாமா செய்ய இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story