லாட்டரி சீட்டு விற்ற 8 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 8 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கடலூர் வன்னியர்பாளையம் சீனுவாசன் (வயது 45), பாதிரிக்குப்பம் கிருஷ்ணாநகர் முருகன் மகன் சுரேஷ்(27), கம்மியம்பேட்டை ஜே.ஜே. நகர் கிருஷ்ணமூர்த்தி(50), கேப்பர்மலை சலங்கைநகர் ராஜ்குமார்(47), நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி மணிகண்டன்(42), கொங்கராயனூர் பிரகாஷ்(32), விருத்தாசலம் ரெயில்வே ஜங்ஷன் ரோடு ராமலிங்கம்(60), சிதம்பரம் எண்ணாநகரம் சங்கர்(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்


Next Story