பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை மேம்பாலத்தின் கீழ் இந்திரா நகர் பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் (வயது 52), வீரப்பன் (62), முருகன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கோனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய காணையை சேர்ந்த செந்தில்வேலன் (41), வேலாயுதம் (60), கேசவன் (60) ஆகியோரையும், காணையில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (47), கோவிந்தராஜ் (56) ஆகியோரையும் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story