மூதாட்டியிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு


மூதாட்டியிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு
x

மூதாட்டியிடம் 8 பவுன் நகைகளை 2 பேர் பறித்து சென்றனர்.

திருச்சி

நகைகள் பறிப்பு

உப்பிலியபுரம் ரெட்டியார் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி நீலாம்பாள்(86). இவருக்கு வீட்டிற்கு நேற்று மாலை சொகுசு காரில் வந்த ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும், சுந்தர்ராஜ் இறந்ததற்கு வருத்தம் தெரிவிக்க வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் நீலாம்பாளை மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலி, 2 பவுன் வளையல்களை பறித்து சென்றனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. பிரமுகர் மனைவியிடம்...

*திருவளர்சோலை அருகே உள்ள உத்தமர்சீலி பகுதியை சேர்ந்த, ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் மாயக்கிருஷ்ணன்(59). இவரது மனைவி தனலட்சுமி(55). இவர்கள் வீட்டில் தூங்கியபோது, வீட்டில் புகுந்த மர்ம நபர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story