வால்பாறையில் வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு சீல்நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வால்பாறையில் வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு சீல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வால்பாறை
வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, கடை வாடகை, குடிதண்ணீர் கட்டணம், வீட்டு வரி ஆகிய வரிகள் அனைத்தும் வரிவசூழிக்கும் பணியை வீடுவீடாகவும், கடைகளுக்கும் சென்று நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதி முழுவதும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரிசெலுத்துவதில் பொது மக்கள் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் மேலாளர் சலாவுதீன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் வரிவருவாய் வசூல் அதிகாரிகள் ஆறுமுகம், கார்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் தீவிர வரி வசூழலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் கடைவாடகை கட்டாத 8 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.