இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்


இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்
x

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை,

புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த மாதம் 20-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை போலீசார் கைது செய்தனா். பின்னர் படகுகளுடன் 8 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரிக்கை எழுந்த நிலையில், மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.பின்னர் புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, கொழும்பில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வந்திறங்கிய 8 மீனவா்களையும் அரசு சார்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story