800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நெல்லையில் 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று காலையில் நெல்லை தளவாய்புரம் அருந்ததியர் காலனி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் காரில் ஒருவர் சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தப்பிச்சென்ற நபர் திருக்குறுங்குடி வடக்கு ரதவீதியை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story