காலாவதியான 8,000 மதுபாட்டில்கள் குப்பை கிடங்கில் கொட்டி அழிப்பு


காலாவதியான 8,000 மதுபாட்டில்கள்  குப்பை கிடங்கில் கொட்டி அழிப்பு
x

திருச்சி விமான நிலையத்தில் காலாவதியான 8,000 மதுபாட்டில்கள் கரூர் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. கிடப்பில் கிடந்தது

கரூர்

கிடப்பில் கிடந்தது

திருச்சி சர்வதேச விமான நிலைய சரக்கு முனையம் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை இறக்குமதி செய்தனர். பின்னர் இந்த மதுபாட்டில்களை வாங்கி செல்லாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

மதுபாட்டில்கள் அழிப்பு

இதனையடுத்து இந்த மதுபாட்டில்கள் 12 ஆண்டு காலமாக சுங்கவரி துறையின் குடோனில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மதுபாட்டில்களின் பயன்பாடு தேதி காலாவதி ஆனது. இதையடுத்து பல லட்சம் மதிப்புள்ள காலாவதியான மதுபாட்டில்கள் திருச்சி சுங்கத்துறையினரால் லாரி மூலம் கரூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் கரூர்-வாங்கல் சாலையில் அமைந்துள்ள கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 6 அடி குழி தோண்டப்பட்டு அதில் 810 பெட்டிகளில் இருந்த சுமார் 8 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. அப்போது திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story