சென்னையில் போலி தங்க வளையல்களை அடகு வைத்து ரூ.81 ஆயிரம் மோசடி - ஒருவர் கைது
தங்க முலாம் பூசப்பட்ட வலையல்களை அடகு வைத்து, 81 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை வியாசர்பாடி அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நகைக்கடன் நிறுவனத்தில், சங்கர் ராஜ் என்பவர் தங்க வளையல்களை அடமானம் வைத்து பணம் கேட்டுள்ளார். வளையல்களை மதிப்பீடு செய்த ஊழியர்கள், அதற்கு 81 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த இரண்டு வயல்களையும், தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க வளையல்கள் என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்த சங்கர்ராஜ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story